அரசியலமைப்பு சட்டம் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதனிடையே பாஜக பிரமுகர் ஷேக் வசீம் பாரி, அவரின் சகோதரர் உமர் சுல்தான், தந்தை பஷீர் ஷேக் அகமது ஆகியோர் அடையாளம் தெரியாத பிரிவினைவாதிகளால் வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர் கதையாகிவருகிறது என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று மாலை, பந்திபோரா மாவட்டத்தில் பாஜக பிரமுகர், அவரின் குடும்பத்தார் ஆகியோர் மீது பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை நான் கண்டிக்கிறேன்.
-
Sorry to hear about the murderous terror attack on the BJP functionaries & their father in Bandipore earlier this evening. I condemn the attack. My condolences to their families in this time of grief. Sadly the violent targeting of mainstream political workers continues unabated.
— Omar Abdullah (@OmarAbdullah) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sorry to hear about the murderous terror attack on the BJP functionaries & their father in Bandipore earlier this evening. I condemn the attack. My condolences to their families in this time of grief. Sadly the violent targeting of mainstream political workers continues unabated.
— Omar Abdullah (@OmarAbdullah) July 8, 2020Sorry to hear about the murderous terror attack on the BJP functionaries & their father in Bandipore earlier this evening. I condemn the attack. My condolences to their families in this time of grief. Sadly the violent targeting of mainstream political workers continues unabated.
— Omar Abdullah (@OmarAbdullah) July 8, 2020
சோகத்தில் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: என்-95 மாஸ்க் போல பாதுகாப்பளிக்கும் சில்வர் மாஸ்க்: பரபரப்பைக் கிளப்பிய நகைக்கடை உரிமையாளர்!