புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பாதுகாப்பாகச் செல்வதற்காக இரண்டு இனோவா கார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது, பாதுகாவலர்கள் வாகனங்கள் அடிக்கடி பழுதானது. மேலும், முதலமைச்சரின் வாகனத்தின் வேகத்திற்கு, பாதுகாவலர்கள் வாகனங்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறின.
இதையடுத்து, புதிய வாகனங்கள் வாங்குவதற்கு காவல் துறை சார்பில் போக்குவரத்துத் துறைக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், நிதி தட்டுப்பாடு காரணத்தால், ஓராண்டாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வாகனத்திற்கான கொட்டேஷன் வழங்கப்பட்டு, உள்ளூர் வரி ரத்து செய்யப்பட்டது. இதன்படி, இரண்டு இனோவா கார்கள் வாங்கப்பட்டன.
இதையடுத்து, இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலிருந்து, புதிய வாகனங்கள் முதலமைச்சரின் பாதுகாப்புக்காக இயக்கப்பட்டன. நிதி பற்றாக்குறையால், தாமதமானாலும், தற்போது பாதுகாப்பு வாகனங்கள் மாற்றப்பட்டது, காங்கிரஸ் கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் தளர்வு - முதலமைச்சர் அறிவிப்பு