ETV Bharat / bharat

நீட் தேர்வுக்கான உடைக் கட்டுப்பாடுகளை அறிவித்தது தேசிய தேர்வாணையம்!

டெல்லி: இந்தியா முழுவதும் நாளை நடைபெறவுள்ள மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகளை தேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டெல்லி
author img

By

Published : May 4, 2019, 10:00 AM IST

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான உடைக் கட்டுப்பாடுகளை தேசிய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், 14 நகரங்களில் 188 தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதேபோல், ஃபோனி புயல் பாதித்த இடங்களில் நீட் தேர்வினை ஒத்திவைப்பது குறித்து எந்த எண்ணமும் இல்லை. பாதிப்பு இல்லாத இடங்களைத் தேர்வு செய்து தேர்வினை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.

மேலும் கடைசி நேரத்தில் கிடைக்கப்பெற்ற மையங்கள் மற்றும் மாணவர்களின் தேவை ஆகியவற்றை வைத்து தேர்வு மையங்கள் மாற்றியமைப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் கவலையடையத் தேவையில்லை. நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் இரண்டாவதாகத் தேர்வு செய்த இடங்களிலேயே தேர்வு மையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு தேர்வு மையம் மதுரைக்கு மற்றியமைக்கப்பட்டுள்ளது.

தேர்வறைக்கு மாணவர்கள் எடுத்து வரவேண்டியவை:

  • புகைப்படம் ஒட்டிய ஹால் டிக்கெட்
  • ஆதார் கார்டு

உடைக் கட்டுப்பாடுகள்:

  • முழுக்கை சட்டை அணியக் கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும்.
  • ஷூக்கள் அணியக்கூடாது. காலணி மட்டுமே அணிய வேண்டும்.
  • கண்ணாடி, வாட்ச், கடிகாரம், கால்குலேட்டர், தேர்வு அட்டை, ரப்பர், ஸ்கேல், பேனா ஆகியவற்றை எடுத்துவரக் கூடாது.

மேலும் மாணவர்கள் கலாசார மற்றும் மதரீதியான உடைகளை அணிந்து வந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வறைக்கு வர வேண்டும். அவர்கள், முழுமையான சோதனைக்குப் பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

சர்க்கரை நோய் உள்ள மாணவர்கள், தேவையான மாத்திரை, மருந்துகளை எடுத்துவர அனுமதியுண்டு. சாப்பிடுவதற்கு ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களைக் கொண்டு வரலாம். ஆனால் மற்ற உணவுகளுக்கு அனுமதியில்லை.

நீட் தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்க சிசிடிவி, வீடியோ பதிவு, எலக்ட்ரானிக் கருவிகளை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

https://www.ndtv.com/tamil/neet-2019-dress-code-for-examinees-know-about-it-2032449

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.