ETV Bharat / bharat

ரயில்வே வாரியத் தலைவரிடம் மனு அளித்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன்

டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்களுக்கு மிகக் குறைவான அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த மனுவை ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவிடம், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வழங்கினார்.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், MP Venkatesan, மதுரை எம்பி,

author img

By

Published : Feb 14, 2020, 7:04 PM IST

டெல்லியில் உள்ள ரயில் பவனில் ரயில்வே வாரியத்தலைவரை சந்தித்த பிறகு, வெங்கடேசன் கூறியதாவது: 'சமீபத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக்காட்டிலும் வடக்கு ரயில்வேக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்களின் கீழ், நடைபெற்றுவரும் 10 திட்டங்களுக்குத் தலா ரூ.1000 விகிதம் ரூ.10 ஆயிரமும், நான்கு இரட்டை வழிப்பாதை திட்டங்களுக்கு தலா ஆயிரம் விகிதம் ரூ.4000மும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரேயொரு இரட்டை வழித்தட திட்டத்துக்கு மட்டும் ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு ரயில்வேயின் புதிய திட்டங்களுக்காக ரூ.7000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரயில்வேத்துறை சம்பந்தமாக, தமிழ்நாட்டில் தற்போது நடந்துவரும் பணிகளுக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்று, கடந்த நவம்பரில் நாடாளுமன்றத்தில் நான் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் ரூ.22,000 கோடி தேவைப்படுகிறது என்றார்.

ஆனால், அதில் 5% நிதிதான் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்ட அநீதியாகும். எனவே, இது தொடர்பாகவே ரயில்வே வாரியத் தலைவரை சந்தித்து மனு அளித்தேன்' இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாமல் இருப்பது குறித்த தக்க பதிலை வாரியத்தலைவர் அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசும் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளது' என்றும் குற்றஞ்சாட்டினார்.

ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் ரயில்வே திட்டங்களுக்கான நில கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வினோத் குமார் யாதவ் தன்னிடம் தெரிவித்தார் என்றும் வெங்கடேசன் கூறினார்.

இறுதியாக தமிழ்நாடு பட்ஜெட்டில், கீழடி அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை காட்சிப்படுத்துவதற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக சு. வெங்கடேசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு நாள் - ராகுல் காந்தி எழுப்பும் முக்கியமான கேள்விகள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.