கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி பூட்டானுக்கு சுற்றுப்பயணமாகச் சென்றார். அந்தச் சமயத்தில் இருநாட்டு பிரதமர்களும் இணைந்து ரூபே கார்டு திட்டத்தை முதற்கட்டமாகத் தொடங்கிவைத்தனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்ட ரூபே கார்டு திட்டத்தை பிரதமர் மோடியும், பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங்கும் இன்று (நவ.20) காணொலி வாயிலாக அறிமுகம் செய்தனர்.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து பூடானுக்கு செல்பவர்கள் பண பரிவர்த்தனை எளிதில் செய்ய முடியும்.
இந்தக் காணொலி சந்திப்பில் பேசிய மோடி, ”கரோனா பரவும் இந்தக் கடினமான சூழலில் அனைத்து வகையிலும் பூட்டானுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும். அண்டை நாடுகளின் தேவையை பூர்த்தி செய்வது இந்தியாவின் முன்னுரிமையில் ஒன்று”என்றார்.
மேலும், “ராக்கெட் ஏவுதல் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் முறையே ஐஎஸ்ஆர்ஓ மற்றும் பிஎஸ்என்எல் உடன் இணைந்து பணியாற்றும்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை!