ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திர முர்மு ஆகஸ்டு 6ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். அதனால் அவரது பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ராஜ் பவனில் ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்தார். இந்த நிகழ்வில் முந்தைய துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்களான ஃபாரூக் கான், பசீர் கான், நாடாளுமன்ற உறுப்பினர் நஜீர் அகமது லாவே, பாஜக மக்களவை உறுப்பினர் ஜுகல் கிஷோர் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதே கனவு' - துணைநிலை ஆளுநர் பேச்சு