கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு விமான நிலையத்திற்கு அழைப்பொன்று வந்தது. அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் வல்லுநர்கள் சல்லடைபோட்டு தேடியும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. அதன்பின்தான் அது புரளி எனத் தெரியவந்தது. உடனடியாகக் களத்தில் இறங்கியது மங்களூரு காவல் துறை.
இது தொடர்பாக ஒருவரைக் காவல் துறையினர் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.