கர்ப்பிணி மகளைக் காணச் சென்ற தந்தை பிணமாக ஆற்றில் கரை ஒதுங்கிய சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்ப்பிணிப் பெண்ணின் தந்தை பெருமாள். 60 வயதாகும் பெருமாளுக்கு ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையம் தான் சொந்த ஊர். மகள் சுமதியை, கர்நாடக மாநிலம் தமிழ்நாடு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஹனூர் தாலுகாவின் புதூர் கிராமத்தில் திருமணம் முடித்து கொடுத்தார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுமதியை, மேட்டூரில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதித்துள்ளனர். ஊரடங்கினால் மகள் சுமதியை காண வாய்ப்பிலாத நிலையில், பெருமாள் ஒரு பயங்கர முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, காரெகாடு எனும் இடத்திற்கு நீந்திச் சென்று, அங்கிருந்து எப்படியாவது மகள் இருக்கும் இடத்தை எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என்றெண்ணியுள்ளார்.
தனது உயிரையும் துச்சமென மதித்து, ஒரு மணி நேர நீச்சல் எல்லையைத் தொட, நீந்தத் தொடங்கிய பெருமாளுக்கு, தன் இலக்கை அடைய 200மீ இடைவெளி இருக்கும் போது மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளார். மேலும், நீந்த முடியாத அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.