ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, பிரிவு 370, 35ஏ நீக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜம்முவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது மாறாக பயங்கரவாதிகள் ஊடுறுவல்கள் அதிகரிக்கத் தொடங்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் புல்வாமா மாவட்டம் ட்ரால் பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியதாவது, "நீண்ட நாட்களாக இங்கு வசிக்கும் இளைஞர்கள் விளையாடுவதற்கு மைதானம் கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்காக பல உயர் அலுவலர்களை சந்தித்து மனுக்களை கொடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைகள், இளைஞர்கள் என பலரும் மைதானத்தில் விளையாடுவர் என்றனர். அதையடுத்து குழந்தைகளுக்கான கல்வி மேம்படும், அங்கன்வாடி மையங்களில் சத்தாண உணவுகள் வழங்கப்படும், மருத்துவ சேவைகள் அதிகரிக்கும் உள்ளிட்ட அனைத்தும் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
மேலும், இப்பகுதியில் பள்ளிகள் உள்ளன ஆனால் கல்லூரிகள் கிடையாது. கல்லூரிகள் கட்டப்பட வேண்டும். கல்லூரிகள் இல்லாமல் 10கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளது என்று வேதனை தெரிவித்தனர். ஜம்முவிற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அமைதி நிலவும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இந்த மோடி அரசின் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் ஜம்மு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார்" என்று உறுதியாக தெரிவித்தனர்.