ETV Bharat / bharat

விண்ணில் பாய்கிறது சந்திரயான் 2...

ஸ்ரீஹரி கோட்டா: இஸ்ரோவின் அடுத்த திட்டமான சந்திரயான் -2 விண்கலம் வரும் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.

விண்ணில் பாய்கிறது சந்திரயான் 2...
author img

By

Published : Jul 3, 2019, 12:14 PM IST

பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, கடந்த 2008ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் விண்கலத்தை அனுப்பியது. 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 312 நாட்கள் செயல்பாட்டிலிருந்தது.

இந்நிலையில் அடுத்தகட்டமாக இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் -2 விண்கலம் வரும் ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 2:51 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இது சந்திரயான் 1 போல நிலவின் சுற்று வட்டப்பாதையிலிருந்து மட்டும் ஆய்வுகளைச் செய்யாமல் நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம்

திட்டமிட்டபடி விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பின் இச்சாதனையைச் செய்த நான்காம் நாடு என்ற பெருமையை இந்தியா அடையும்.

இந்த நிகழ்வைப் பொதுமக்கள் நேரடியாகக் காணுவதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜூலை 4ஆம் தேதி முதல் பொதுமக்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Intro:Body:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) கனவு திட்டமான சந்திரயான் -2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2:51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்வை பொதுமக்கள் நேரடியாக காணுவதற்கு பார்வையாளர் மாட (கேலரி) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜூலை 4 ஆம் தேதி முதல் பொதுமக்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிஎஸ்எல்வி சி 45 ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியை பொதுமக்கள் இங்கிருந்து நேரடியாக கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.