உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 62 ஆயிரத்து 652 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:
ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை / நாட்டில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை - 62ஆயிரத்து 652 / 28லட்சத்து 36 ஆயிரத்து 926
ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை / நாட்டில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை - 977 / 51ஆயிரத்து 866
கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 96ஆயிரத்து 664ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 73.91 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 6 லட்சத்து 86ஆயிரத்து 395 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 14 நாள்களில் இந்தியாவில் 20 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் 3 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரத்து 252 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று(ஆகஸ்ட் 19) ஒரே நாளில் 9லட்சத்து 18ஆயிரத்து 470 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பில், மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 6 லட்சத்து 28 ஆயிரத்து 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 பேர் பாதிக்கப்பட்டு, இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றன. கடந்த 10 நாள்களாகத் தினமும் 50,000க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய தினம் கரோனா வைரஸால் புதிதாக 5 ஆயிரத்து 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கையானது 3 லட்சத்து 55ஆயிரத்து 449ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 186 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த காவலரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!