கரோனா தொற்று ஊரடங்கினால் பல மாணவர்கள் வெவ்வேறு நகரங்களுக்குச் சென்று, தேர்வு மையங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளனர். இதனிடையே, சமூக வலைதளங்களில் மாணவர்கள் இதுதொடர்பான பயணக் கவலைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், ஐ.ஐ.டி.களின் மாணவர்களும் பழைய மாணவர்களும் உடனடியாக முன்வந்து, தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு பிரத்யேக இணையதளத்தை தொடங்கியுள்ளனர்.
இது குறித்து டெல்லி ஐ.ஐ.டி இயக்குநர் வி. ராம்கோபால் ராவ் கூறுகையில், " 'EduRide' எனப்படும் இணையதளம், குறிப்பாக தொலைதூர இடங்கள் மற்றும் கிராமப் பகுதிகளிலிருந்து வரும் தேர்வர்களின் பயணச் சுமையை எளிதாக்கும்.
தேர்வர்கள் இந்த இணையதளத்தில் பதிவுசெய்த பிறகு, தொடர்பு விவரங்களின் பரிமாற்றம் மூலம் தன்னார்வலர்கள் மற்றும் தேர்வர்களின் பொருத்தமான சேர்க்கைகளை இந்த இணையதளம் இணைக்கும். பின்னர் தேர்வு மையத்திற்கு பயணத்தைத் திட்டமிட ஒருங்கிணைக்க முடியும். நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் வாகனப் போக்குவரத்து செலவிற்கு உதவும்.
தேர்வுகளை மேற்கொள்வதில் தாமதம் பூஜ்ஜிய கல்வியாண்டிற்கு வழிவகுக்கும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளதால், செப்டம்பர் மாதத்தில் அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜேஇஇ-மெயின்) செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தொடர்ந்து இரண்டு முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (ஜேஇஇ-மெயின்) முதலில் ஏப்ரல் 7-11ஆம் தேதி திட்டமிடப்பட்டு, பின் ஜூலை 18-23ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. நீட்-யுஜி முதலில் மே 3ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. இப்போது செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதி மற்றும் பிற தளவாட உதவியுடன் தேர்வர்களுக்கு உதவ தீர்வுகளை கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.