ETV Bharat / bharat

'காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?' அதிர்ச்சியில் குஜராத் மாணவர்கள்! - காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?

காந்திநகர்: குஜராத் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் 'காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?' என்று கேள்வி இடம் பெற்றிருந்தது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர்கள்
author img

By

Published : Oct 13, 2019, 11:23 PM IST

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு ஒன்றில் Gandhijiye aapghaat karwa maate shu karyu? (காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?) என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது.

அதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில், உங்கள் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மது விற்பனை, விற்பனையாளர்கள் குறித்தும் காவல்துறையினருக்கு கடிதம் எழுதுக என்று கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மகாத்மா காந்தியை 1948ஆம் ஆண்டு டெல்லியில் ஜனவரி 30ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டு கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் தெரிந்த விஷயம். மேலும் அம்மாநிலத்தில் மதுவிலக்கு முழுமையாக அமலில் இருக்கும்போது இது போன்ற கேள்விகள் மாணவர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாராணை நடைபெற்றுவருகிறுது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காந்திநகர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சட்டப்பேரவை ஒளிபரப்பு அனுமதி மறுப்பை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராட்டம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.