கடந்தாண்டு தெலங்கானா, மாகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி வெகுவாக பாதித்தது. இதனால் வெங்காய விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே, பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், வெங்காய விலை தற்போது படிப்படியாக குறைந்து வருவதால், அதன் மீதான ஏற்றுமதி தடையை விலக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்