ETV Bharat / bharat

எட்டு லட்சத்தை நெருங்கும் உலக அளவிலான கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை!

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை  இரண்டு கோடியே 25 லட்சத்து 80 ஆயிரத்து  254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு லட்சத்து 91 ஆயிரத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

covid19
covid19
author img

By

Published : Aug 20, 2020, 3:33 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா தொற்று, தற்போது உலகின் பிற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியா உட்பட அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 25 லட்சத்து 80 ஆயிரத்து 254 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 91 ஆயிரத்து இரண்டாக அதிகரித்துள்ளது. அதே சமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து ஓராயிரத்து 278 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் ஒன்பது லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (ஆக.19) கரோனாவால் 69 ஆயிரத்து 652 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 977 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 866ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், மருத்துவ வல்லுநர்கள், மேலும் சோதனைத் திறனை அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இந்தியா உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மக்கள் தொகை கொண்ட நாடு.

ஆஸ்திரேலியாவின் ஹாட் ஸ்பாட் விக்டோரியா மாகாணத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்து வருவதால், அங்கு வரும் ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியாவில், புதிதாக 288 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 346ஆக உயர்ந்துள்ளது. 307 பேர் இதுவரை அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் கட்ட கரோனா தொற்றுப் பரவல் அங்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

உலகில், கரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்த அளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், தொற்றுப் பரவலின் எண்ணிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த காவலரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.