டெல்லி: தேசிய தலைநகர் டெல்லி துர்க்மேன் கேட் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கட்டடம் பாழடைந்து காணப்பட்டதாலும், முன்னரே இங்கிருந்து ஆள்கள் வெளியேற்றப்பட்டதாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும் கட்டம் இடிந்து விழுந்தபோது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டட விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் சம்பவ பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தீ விபத்தில் 72 வயது முதியவர் உயிரிழப்பு, 22 பேர் படுகாயம்!