நேர்மைக்கும், அதிரடிக்கும் பெயர்போன காவல் அலுவலராக கருதப்படும் லக்ஷமி நாராயணன் என்பவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91.
அவசர நிலை பிரகடன காலத்திற்குப் பிறகு மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) இணை இயக்குநராக இருந்த லக்ஷ்மி நாராயணன் கைது செய்தார்.
பின்னர், ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி லக்ஷ்மி நாராயணனை மத்தியப் புலனாய்வுத் துறை இயக்கநராக்க விரும்பினார். ஆனால், எம்ஜிஆர் அவரை தமிழ்நாட்டின் காவல் துறை தலைமை இயக்குநராக்கினார்.
இவர் 1985ஆம் ஆண்டு காவல் துறையில் இருந்து ஓய்வுபெற்றார். இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். இவரது மூத்த சகோதரர் மறைந்த முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் என்பது குறிப்பிடத்தக்கது.