இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதாக பலர் விமர்சித்துவந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்த சிறிய தொகுப்பை கீழே காண்போம்.
புதிய வாகனங்கள் வாங்க அரசு அலுவலகங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.
உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, வாகனங்களின் விலை குறைப்பு 15லிருந்து 30 விழுக்காடாக உயர்த்தப்படும்.
இந்தியாவின் வரி வருமானம் பெருகியுள்ளதால், வருமான வரி தாக்கல் அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி முறையில் மாற்றாங்கள் கொண்டு வரப்படும்.
தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், வழிமுறைகள் ஆகியவை எளிதாக்கப்பட்டுள்ளன.
வருமான வரித்துறையில் குற்றம் இழைத்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலமே சம்மன் அனுப்பப்படும்.
ஆன்லைன் மூலம் கடன் விண்ணப்பிப்போருக்கு விரைவில் கடன் வழங்கப்படும்.
சிறு மற்றும் குறுந்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 70,000 கோடி வழங்கப்படும். பின்னர், அதன் பங்குகள் தனியாருக்கு வழங்கப்படும்.
வீடு, கார் வாங்கும் தவணை குறைக்கப்படும்.
வங்கிகள் ஒரு முறைக்கு மேல் ஆதார் அட்டையை கேட்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.
சிஎஸ்ஆர் பங்களிப்பை வழங்காத நிறுவனங்கள் மீது சிவில் நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும்.
ஸ்டார்டஆப் நிறுவனங்களுக்கு வரியில் சலுகைகள் வழங்கப்படும்.
வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடனை அடைத்த 15 நாட்களில் சம்பந்தபட்டவர்களுக்கு ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.