டெல்லி கார்கி கல்லூரியில் கடந்த வாரம் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, கல்லூரிக்குள் புகுந்து அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்த பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, கல்லூரி மாணவிகள், பெண் ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இரண்டு வாரங்களில் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறி அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் டெல்லி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க : மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: காவல் துறையை சாடிய கபில் சிபல்