கேரளாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆரிஃப் முகம்மது கான் தன் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது நமது ஈடிவி பாரத் செய்திக்கு பேட்டியளித்த அவர், ”கேரளா 100 விழுக்காடு கல்வியறிவு பெற்றுள்ளதால், மற்ற மாநிலங்களைவிட வித்தியாசமான மாநிலமாக இருக்கிறது. நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை போக்க வேண்டுமெனில், மக்களுக்கு கல்வியறிவை புகட்ட வேண்டும். கல்வியறிவு அதிகமானால் வேலைவாய்ப்பின்மை குறையும்” என அவர் கூறினார்.
கேரளாவின் 22ஆவது ஆளுநராக செப்டம்பர் 6ஆம் தேதி ஆரிஃப் கான் பதவியேற்றுக் கொண்டார்.