ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், இன்று சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கிடைத்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் முன் ஜாமின் கிடைத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அனுமதி அளித்த ஆறு அரசு செயலர்கள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணையை சிதம்பரம் ஒருமுறை கூட தவிர்க்கவில்லை. இந்த வழக்கு நீதிமன்றத்தில் சமர்பித்த ஆதாரங்களை சார்ந்து நடக்கவில்லை. முன் ஜாமின் பெறுவதற்கான சிதம்பரத்தின் வழக்கு குறித்த தீர்ப்பு ஏழு மாதங்களுக்கு பிறகு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.