சத்தீஸ்கர் தாந்தேவாடா மாவட்டம் ஆரன்பூர் காவல் நிலையம் பொட்டாலி முகாமில் சிறப்பு பிரிவு காவலர் ராமராம் சுவாமி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்ட சக காவலர்கள் ராமராமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சிறப்பு பிரிவு காவலர் ராமராம் சுவாமி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். தற்கொலை குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமராம் எதற்காக தற்கொலி செய்துகொண்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தீஸ்கரில் துணை ராணுவப் படை வீரர் உள்பட 50 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க....கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை