இவர்களில் சண்டிகரைச் சேர்ந்த மருத்துவர்கள் கீதிகா சிங் - சஞ்சய் ஜெய்ஸ்வால் தம்பதியினரும் அடக்கம். மருத்துவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கரோனா மருத்துவப் பணிக்காக தற்போது சென்றுள்ள நிலையில், கீதா தானும் மருத்துவப் பணியில் இருந்துகொண்டே தன் ஏழு வயது மகனுடன், கடந்த 17 நாள்களாக கடும் மன அழுத்தங்களுக்கிடையே போராடி வருகிறார்.
சண்டிகர் மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரியில் பணியாற்றி வரும் ஜெய்ஸ்வால் கரோனா மருத்துவப் பணியில் ஈடுபட்டிந்ததால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். கரோனா தொற்று இன்றி ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில் அவர் ஆறு நாள்களில் வீடு திரும்பிவிடுவார் என நம்பிக்கை தெரிவிக்கிறார் கீதிகா சிங்.
கணவரைப் பிரிந்து தான் தனியாகக் குழந்தையுடன் சமாளித்து வருவது குறித்துத் தெரிவித்த அவர், ஒவ்வொரு முறை தான் வெளியே செல்லும்போதும் தன் ஏழு வயது குழந்தையை வீட்டில் வைத்து பூட்டி விட்டு செல்ல வேண்டியுள்ளதாகவும், கரோனா அச்சத்தின் காரணமாக தன் குழந்தையை பார்த்துக் கொள்ள எவரும் தயாராக இல்லை என்றும் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மகளைக் காண ஆற்றில் நீந்திச் சென்ற தந்தை பிணமாக ஒதுங்கிய அவலம்