தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாகப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இதுகுறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து அவ்வப்போது சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.