கரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் எல்லையில் அனுமதியளிக்கப்பட்டு வந்தது. இந்த நெருக்கடியான சூழலில், கேரளாவில் பலகைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரி தேவி என்ற பெண்ணுக்கு பிரவச வலி ஏற்பட்டது.
இந்த பகுதியில் உள்ள அனைவருக்குமே மங்களூரு மருத்துவமனைதான் மிகப்பெரிய நம்பிக்கை. ஆனால், கேரளாவில் ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக இந்த தம்பதியினர் எல்லையைத் தாண்டி இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியிலிருக்கும் பொது மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தனர். ஆனால், இந்த சர்ச்சைகள் நிறைவடைந்து, மருத்துவமனையை அடைவதற்கு வெகு நேரமாகிவிடும்.
கவுரியின் பிரசவ வலியும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அஸ்லம், முஸ்தபா ஆகியோர் வாகனத்தை வழியிலேயே நிறுத்தி, அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கின்றனர். ஆம்புலன்சிலேயே கவுரி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது, அரசு மருத்துவமனையில் தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல, டயாலிசிஸ், இருதயம், புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட கொடுமையான நோய்களின் சிகிச்சைக்கு கூட மருத்துவமனைக்குச் செல்ல எல்லையில் அனுமதியில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் ஓபிஆர் உதவியுடன் மீட்பு!