பாஜக மாநிலங்களவை கொறடா பதவியில் சிவ் பிரதாப் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பதவிவகித்துவரும் இவர், உத்தரப் பிரதேச மாநில பாஜக துணைத் தலைவராகவும் உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நிதித்துறை இணை அமைச்சராகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1970களிலிருந்து பொதுவாழ்க்கையில் இருக்கும் சுக்லா, எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, 19 மாதம் சிறையிலிருந்துள்ளார்.
1989ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட இவர், பின்னாளில் அம்மாநில கல்வியமைச்சராகப் பதவிவகித்தபோது அனைவரும் கல்வி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள், சிறைக் கைதிகளின் கல்விக்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவியது.
இதையும் படிங்க: 'மோதல் போக்கை கைவிட்டு மக்கள் பணியாற்றுங்கள்' - மம்தாவைச் சாடும் ஆளுநர்