கரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் முடங்கியிருந்தன. இந்த நிலையில், ஆந்திரா, மேற்கு வங்கம் மாநிலங்கள் தவிர நேற்று மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. ஆந்திராவில் இன்று விமான சேவை தொடங்கிய நிலையில், மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் உள்நாட்டு விமான சேவை தொடங்கவுள்ளது.
- இதற்காக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். அதன் சிறப்பம்சங்கள் இதோ,
- மேற்குவங்கத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு புறப்படும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- கரோனா வைரசுக்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாத பயணிகள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர்.
- அதேபோல் மற்ற மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கம் வந்தடையும் பயணிகள் அனைவருக்கும் மருத்து பரிசதோனை நடத்தப்படும். அதில் அறிகுறியில்லாத பயணிகள் மட்டுமே அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
- ஒருவேளை கரோனா தொற்று அறிகுறி இருந்தால் பயணிகள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அல்லது மாநில அழைப்பு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
- இதைத்தொடர்ந்து, கரோனா அறிகுறி உள்ளவர்கள் சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களது மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
- லேசான அறிகுறிகள் உள்ள பயணிகள் 14 நாள்கள் கரோனா சிறப்பு மருத்துவமனை அல்லது அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தபடுவர்.
- கரோனா இருப்பதற்கான அதிக அறிகுறிகள் உள்ள பயணிகள் கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.
- விமான நிலையத்திற்குவரும் பயணிகள் அனைவரும் தங்களுக்கு கரோனா இல்லை என்ற மருத்துவச் சான்றிதழை கொண்டுவர வேண்டும்.
- மற்ற மாநிலங்களிலிருந்து மேற்குவங்கம் வந்தைடையும் பயணிகள் அனைவரும் சுய அறிவிப்பு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் அவர்களின் உடல்நிலை 14 நாள்கள் கண்காணிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு!