குடகு (கர்நாடகா): கொடவாஸ் பாரம்பரிய உடையணிந்து, தன்பாலினத்தவரை திருமணம் செய்துகொண்ட மருத்துவரின் செயல் அம்மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார் ஷரத் பொன்னப்பா. இவர் வட இந்தியாவைச் சேர்ந்த தன்பாலினத்தவரான சந்தீபா டோசஞ்சை செப்டம்பர் 26ஆம் தேதி கலிபோர்னியாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அப்போது அவர் கொடவாஸ் இன மக்களின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷரத் பகிர்ந்தார்.
கொடவாஸ் உடையணிந்து தன்பாலினத்தவரை மணந்து கொண்ட ஷரத் மீது, கொடவாஸ் இன மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திவருகின்றனர். மேலும், தங்களின் அமைப்பு மூலம் ஷரத் மீது நடவடிக்கை எடுக்கபோவதாகவும் கொடவாஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொடவாஸ் சமூகத்தின் முக்கியப் பிரமுகர் ஈடிவி பாரதிடம் பேசுகையில், ஷரத் திருமண புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதே சமூகத்தைச் சேர்ந்த அவர், பாரம்பரிய உடையை உடுத்தி இப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். இது இனத்தின் அடையாளத்தை இழிவுபடுத்தும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.