குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலிருக்கும் கெபச்சடா கிராமத்தில், வழக்கம்போல சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஏதோ அழுகுரல் கேட்டு விளையாட்டை நிறுத்திய சிறுவர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது குப்பைப் போல தெருவில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் கடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட சிறுவர்கள் ஆம்புலன்ஸிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், கிட்டத்தட்ட குழந்தையின் உடலில் 22 இடங்களில் ஆழமான கீரல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கைவிடப்பட்டக் குழந்தையை பற்றி விசாரணை மேற்கொண்டனர். திறந்தவெளியில் குழந்தையை வீசிவிட்டு சென்ற பெற்றோரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அலுவலரைக் கவர்ந்த 13 வயது சிறுமி!