ETV Bharat / bharat

பார்பி உலகில் சமந்தா, நயன்தாரா, ஸ்ருதி ஹாசன்... தெறிக்கவிட்ட AI..!

Celebrities in Barbie world: செயற்கை நுண்ணறிவு மூலம் பார்பியாக வடிவமைக்கப்பட்ட கோலிவுட் நடிகைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

AI imagines Samantha
பார்பி உலகம்
author img

By

Published : Aug 21, 2023, 5:58 PM IST

ஹைதராபாத்: ஹாலிவுட் இயக்குனர் கிரேட்டா கெர்விக் இயக்கிய "பார்பி" திரைப்படம் கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியானது. இதில், மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், அமெரிக்கா ஃபெரெரா, இசா ரே, கேட் மெக்கின்னன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பார்பி லேண்ட் என்ற பொம்மை உலகத்தில் வாழும் பார்பி பொம்மைகளை வைத்து, ஒரு ஃபேண்டசி கதையில் பெண்ணியம், பாலின சமத்துவம் போன்ற சிக்கலான சமூக அரசியலை கிரேட்டா கெர்விக் பேசியிருந்தார்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வெளியான அதே நாளில்தான் பார்பி திரைப்படமும் வெளியானது. ஆனால், ஓப்பன்ஹெய்மரை விட பார்பி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பார்பி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பார்பி திரைப்படம் வெற்றி பெற்றது. இப்படம் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையில், பார்பி படத்தின் தாக்கத்தால், தமிழ் சினிமா ரசிகர்கள் கோலிவுட் நடிகர்களை பார்பி உலகிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். பார்பி உலகில் தமிழ் நடிகர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு, செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் உயிர் கொடுத்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகியோரின் புகைப்படங்களை பார்பில் உலகின் கென்னைப் போல உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகப் பரவின.

இந்த நிலையில், தமிழ் நடிகைகளையும் ரசிகர்கள் பார்பி உலகிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். புகைப்படக் கலைஞரும், டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட்டுமான ஜதுர்சன் பிரபாகரன் என்பவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், ஏஐ-யால் பார்பியாக வடிவமைக்கப்பட்ட தமிழ் நடிகைகளின் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். சமந்தா, நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், தமன்னா, த்ரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரின் பார்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் பிங்க் நிற உடையில், பிங்க் நிற அணிகலன்களுடன் அச்சு அசலாக பார்பியைப் போலவே நடிகைகள் காணப்படுகின்றனர். ஏஐ உருவாக்கிய இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவை க்யூட்டாகவும், அழகாகவும் இருப்பதாகவும் கமென்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கள் கலாசாரத்திற்கு எதிராக இருப்பதாக குவைத் நாட்டில் பார்பி படத்திற்குத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.