குஜராத் மாநிலம் கிர்-வெஸ்ட் வனப் பிரிவின் ஜம்வாலா எல்லைக்குட்பட்ட தேவ்லி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பண்ணையிலிருந்து சற்று தூரமாக கரும்பு வெட்டச் சென்ற போது இச்சம்பவம் நடந்ததாக வனத்துறை தலைமை கன்சர்வேட்டர் துஷ்யந்த் வாசவாடா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “ சிறுமி பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சிறுமியை தாக்கி சிறிது தூரத்திற்கு சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். சிறுத்தையை பிடிக்க இப்பகுதியில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளின் கோரிக்கைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் - மு.க ஸ்டாலின் உறுதி