இதுதொடர்பாக, காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் கூறுகையில், "மாநிலத்தின் அசோதர் பகுதியிலுள்ள குளத்தில் இருந்து நேற்று(நவ.16) மாலை இரு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில் உடல்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த 12, 8 வயது சிறுமிகளாகும். மீட்கப்பட்ட இரு சிறுமிகளின் உடலின் கண்கள் பகுதிகளில் காயங்கள் இருந்தன.
காய்கறிகள் வாங்குவதற்குச் சென்ற அக்கா, தங்கையான இரு சிறுமிகளும், வீடு திரும்பவில்லை. பாலியல் வன்புணர்வுக்கு சிறுமிகளை உள்ளாக்க முயன்ற நபர்கள், அது நடைபெறாததால் அவர்களை கொலை செய்திருக்கலாம் என, உயிரிழந்த சிறுமிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரு சிறுமிகள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இதுதொடர்பான அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றார்.