சாலையில் ஓடும் கரடி! இணையத்தில் வைரலான வீடியோ! - THIRUNELVELI BEAR ISSUE
🎬 Watch Now: Feature Video


Published : Feb 27, 2025, 1:19 PM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மறுகால்குறிச்சி பகுதி வழியாக நாங்குநேரிக்கு செல்லும் சாலையில் இன்று (பிப்ரவரி) காலை கரடி ஒன்று சாலையில் சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோமதி ராஜா. இவர் இன்று காலை வழக்கம் போல் அவரது வீட்டில் இருந்து ஆட்டோவில் சவாரிக்காக நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, சாலையின் நடுவே கரடி ஒன்று வாகனத்தின் முன்பாக நடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின் கரடியிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க கோமதி ராஜா அருகிலிருந்த வாழைத்தோப்புக்குள் சென்று ஒளிந்து கொண்டார். மேலும் கரடியை கோமதி ராஜா தனது செல்போனில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கரடி வேகமாக சாலை ஓரம் ஓடுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. மேலும், குறிப்பிட்ட தூரம் சென்ற போது எதிரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் கரடியை பார்த்தவுடன் பீதியில் வாகனத்தை நிறுத்தி திரும்பி சென்றார். இவ்வாறு பட்டப்பகலில் கரடி முக்கிய சாலைகளில் வலம் வருவது, பாதுகாப்பாக இல்லை எனவும் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.