தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற 24 பெருமாள் கருட சேவை நிகழ்வு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்! - Perumal Garuda seva at Tanjore - PERUMAL GARUDA SEVA AT TANJORE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:35 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோயில்களில் 24 கருட சேவை வழிபாடு இன்று (மே 29) வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருட சேவை புறப்பாடு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். 

அதேபோல், இந்த ஆண்டும் 24 பெருமாள்கள் கருட சேவை புறப்பாடு நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் இருந்து திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் ஸ்ரீ நீலமேகப்பெருமாள், ஸ்ரீ நரசிம்ம பெருமாள், ஸ்ரீமணிகுன்னப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீ யாதவ கண்ணன், ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 24 பெருமாள் கோயில்களிலிருந்து புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது. 

தஞ்சை நகரின் முக்கிய ராஜவீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய தேரோடும் வீதிகளில் சுவாமிகள் வலம் வந்து அருள்பாலித்தனர். இந்த கருட சேவையின் போது பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியும், ஆடியும் ஊர்வலமாக வந்தனர். 

திருப்பதிக்கு அடுத்தபடியாக 24 பெருமாள் கருட சேவை இங்கு தான் நடைபெறுகிறது. கோயில் பட்டாச்சாரியார்களுக்கும், சாமி வாகன ஓட்டிகளுக்கும், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் புத்தாடைகளை வழங்கி மரியாதை செலுத்தினர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.