வானத்தில் உள்ள கிரகங்களை பார்க்க விரும்பினால், 2025 உங்களுக்கு அற்புதமானதாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு வானில் கிரகங்களின் தொடர்ச்சியான அணிவகுப்பு நிகழ உள்ளது. இது மிகவும் அரிதானது என்பதால், வானியல் பார்வையாளர்களை உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர். ஜனவரி 21, 2025 அன்று தொடங்கிய இந்த நிகழ்வில், புதிய கிரகம் ஒன்று நாளை சேரவுள்ளது.
ஜனவரி மாதம் தொடங்கிய இந்த நிகழ்வில், ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள் சூரியனின் நேர்க்கோட்டில் இருந்தன. தற்போது அவற்றுடன் இரண்டு கிரகங்களும் இணைந்து 6-ஆக காட்சியளிக்கின்றன. நாளை ஏழாவது கிரகமும் இவற்றின் நேர்க்கோட்டில் இணையும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிரகங்களில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை அடங்கும். நாளை இவற்றுடன் வீனஸ் இணையும் பட்சத்தில், மொத்தம் 7 கிரகங்கள் சூரியனில் இருந்து ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை நம் வெறும் கண்கள் அல்லது அதற்கான டெலஸ்கோப் கருவிகளின் உதவியுடன் காணமுடியும். உயர் தெளிவுதிறன் கொண்ட கேமரா மொபைல்களை வைத்திருக்கும் பயனர்களும், சில செயலிகள் வாயிலாக இவற்றை அடையாளம் காணலாம்.

கிரக அணிவகுப்பு 2025: இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
இந்தியாவில் கிரகங்களின் இந்த அற்புதமான நிகழ்வைக் காண, சூரியன் மறையும் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவில் வாழும் மக்கள் பிப்ரவரி 28 மாலை சூரியன் மறைந்த பின் 45 நிமிடங்களுக்குப் பிறகு, கிரகங்களின் அணிவகுப்பைக் காண முடியும். இருப்பினும், அவற்றைப் பார்க்க, நாம் திறந்த வானம் தெரியும் இடத்திற்குச் செல்ல வேண்டும். முக்கியமாக காற்று மாசு அதிகம் இருக்கும் சூழலில் வானத்தை தெளிவாகக் காண முடியாது. இது தவிர, நாம் வானிலையையும் கண்காணிக்க வேண்டும்.
வானிலை மோசமாக இருந்தால், மேகங்கள் காரணமாக நாம் கிரகங்களைப் பார்க்க முடியாது. நகரங்களின் விளக்குகள் மிகவும் குறைவாக இருக்கிறதோ; இல்லையோ. நாம் ஒரு இருண்ட இடத்தை, அதிக மாசு இல்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும், வானிலையும் நமக்கு சரிவர ஒத்துழைத்தால், அவசியம் நம் கண்களால் கிரக அணிவகுப்பைப் (Planets parade) பார்க்கலாம்.
கிரக அணிவகுப்பு 2025: எப்படி பார்ப்பது?
பார்வைக்கு திறந்த, தெளிவான வானம் இருக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு, வெறும் கண்களால் நாமே மேல்நோக்கிப் பார்க்கலாம். அவற்றைப் பார்க்க, கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து (Apple App Store) ஸ்டார் வாக் 2 (Star Walk 2), ஸ்டெல்லாரியம் (Stellarium), ஸ்கை கேசர் (Sky Gazer) போன்ற பல செயலிகள் உதவியுடன் இந்த அற்புதமான நிகழ்வை காணலாம்.
இதையும் படிங்க: சமுத்திரயானின் ‘மட்ஸ்யா-6000’: கடலுக்கு அடியில் மூவர் 3 மணிநேரம் தாக்குப்பிடித்தது எப்படி? |
- முதலில் திறந்த வான்வெளியை காணும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, இந்த செயலிகளை நம் மொபைலில் நிறுவி, அதை திறக்க வேண்டும்.
- செயலிகளைத் திறந்த பிறகு, நம் மொபைலின் பின்பக்க கேமராவை வான்நோக்கித் திருப்ப வேண்டும்.
- இப்போது நம் மொபைல் செயலியில் வானத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்தின் விவரங்களையும் பார்க்கலாம்.
- நட்சத்திரத்தின் பெயர்கள் என்ன என்பதை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும்.
- நன் போனை மெதுவாக ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு சுழற்றினால், சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் பார்க்கலாம்.
- போனில் கிரகங்களின் பெயர்களைப் பார்த்த பிறகு, மெதுவாக போனை அகற்றி, வானத்தில் ஒரு கிரகமாக இருக்கும் அதே நட்சத்திரத்தை வெறும் கண்களால் பாருங்கள்.
சில நேரங்களில் கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவதை வெறும் கண்களால் காண முடியாமல் போகலாம். இந்த காரணத்திற்காக, நாம் தொலைநோக்கியைப் (டெலஸ்கோப்) பயன்படுத்த வேண்டியிருக்கும்.