ETV Bharat / state

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் போட்டாபோட்டி? தொகுதிகளை இறுதி செய்ய முடியாமல் தவிக்கும் பாஜக?

OPS And TTV In BJP Alliance: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இரு தரப்பும் தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவதால், இரு தரப்பிற்கும் பாஜகவால் தொகுதிகளை இறுதி செய்ய முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

OPS And TTV In BJP Alliance
OPS And TTV In BJP Alliance
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 5:52 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு என விறுவிறுப்பாக செயல்படுகின்றனர். அந்த வகையில், அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த மார்ச் 10-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் விடுதியில் பாஜக மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் கிஷன் ரெட்டி குழு ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த பிறகு கூட்டணியை உறுதி செய்தனர். அதன் தொடர்ச்சியாக, நேற்றைய முன்தினம் (மார்ச் 11) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 12) இரவு டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கிண்டி லீ மெரிடியன் விடுதியில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர்களான அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் 10 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு பாஜகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குச் சம்மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளதாகத் தெரிவித்து 6 தொகுதிகளை ஒதுக்குவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டும் அல்லாது, தேனி தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற உடன்பாட்டிற்கு பிறகே, பாஜகவுடனான கூட்டணியை வெளிப்படையாக டிடிவி.தினகரன் அறிவித்தார் என்றும், டிடிவி தினகரனுக்குத் தேனி ஒதுக்கப்பட்டால் ஓ.பன்னீர்செல்வம், தன் மகனுக்கு ராமநாதபுரம் தொகுதியைக் கேட்ட சூழலில் ராமநாதபுரத்தைக் கூட்டணிக்கு விட்டுத்தர முடியாது என பாஜக கூறிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தேனி தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான தனது மகனுக்கே வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பாஜகவிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இரண்டு தரப்பும் தென் மாவட்டத் தொகுதிகளையே கேட்பதுடன், தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளைக் கைப்பற்றுவதில் போட்டாபோட்டி நிலவுவதாகவும், இரு தரப்பிற்கும் பாஜகவால் தொகுதிகளை இறுதி செய்ய முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், பாஜக குழுவின் கிஷான் ரெட்டி, விகே சிங் ஆகியோர், இரண்டு தரப்புக்கும் சேர்த்து 6 தொகுதிகள் ஒதுக்குவதாகவும் அவற்றில் எந்தெந்த தொகுதி என நீங்களே சமமாகப் பிரித்துக் கொண்டு சொல்லுங்கள் என கூறியதாகவும், தற்போது இரு தரப்பும் அவர்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து ஓரிரு தினங்களில் முடிவு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" - டி.எம்.ஓங்கர் கரூரில் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.