மதுரை: இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில், 'கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06070) ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 1 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! - Lok Sabha Election 2024