கன்னியாகுமரி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி நாளை மாலை வெளியாக உள்ள நிலையில், பிரதமர் மோடி பாஜக கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். இதன் ஒருபகுதியாக, இன்று கன்னியாகுமரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, 'எனது அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே! வணக்கம். என தனது பேச்சை தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து ஒரு பேரலை கிளம்பியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஒரு பேரலை கிளம்பியுள்ளது. இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டின் திமுகவின் கர்வம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியது என்று பேசினார். 1992-ல் ஏக்தா யாத்திரையை தொடங்கினேன். நாட்டை துண்டாட எண்ணியவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எரிந்துவிட்டனர். தமிழ்நாடு மக்களும் திமுக- காங்கிரஸ் இந்தியா கூட்டணியும் கண்டிப்பாக துடைத்து எறியப்படும். இக்கூட்டணி வெற்றி என்ற தலைக்கணம் முற்றிலுமாக துடைத்து எறியப்படுப்படும் என்று பேசினார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியால் எந்த வளர்ச்சியுன் இல்லை. அவரகளது கொள்கையே அரசியலுக்கு வந்து கொள்ளை அடிப்பதே ஆகும் எனக் குற்றம்சாட்டியுள்ளார். 2ஜி ஊழலில் திமுக பெரும்பங்கு வகித்தாகவும், இந்தியா கூட்டணியில் சிடபுள்யு ஊழல், நிலக்கரி ஊழல் என சொல்லிக்கொண்டே போகலாம்' எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுக்கப்பட்டுள்ளனர் என காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் வந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடி வருகையையொட்டி, கன்னியாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செல்லும் சாலையில் இருபுறங்களிலும் 5 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்புகாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கான பணிகள் கடலோர பாதுகாப்பு தகவல் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தென்மண்டல ஐஜி கண்ணன், நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் 12 மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன.
பொதுக்கூட்டம் நடக்கும் இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும், கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு மதியம் 2 மணிவரை போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல, பொதுக்கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி கடற்கரை காந்தி மண்டபம் சன்செட் பாயிண்ட், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டன.
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மைதானம் ஹெலிகாப்டர் இறங்குதளம் கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை திறக்கவும், மதியம் 2 மணிவரை மீனவர்கள் மீன் பிடிக்கவும் மத்திய கடலோர பாதுகாப்பு குழுமம் தடை விதித்தது. இதனால் கன்னியாகுமரி சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், புது கிராமம், சிலுவை நகர், கோவளம் உள்ளிட்ட ஏழு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும் கன்னியாகுமரியில் இன்று காலை 6:00 மணி முதல் மதியம் பொதுக்கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை ஹீரோ பாயிண்ட் இருந்து மகாதானபுரம் ரவுண்டானாவரை எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. கூட்டத்திற்கு வருகை தரும் வாகனங்கள் சரவணதேவி வரை அனுமதிக்கப்பட்டது. இதுதவிர, கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வரை எந்த வாகனங்களும் மற்றும் பாதசாரிகள் செல்லவும் அனுமதி கிடையாது என போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் அரசு பேருந்துகள் அனைத்தும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு முன்பாகவே நிகழ்ச்சி முடிந்த அங்கிருந்து மீண்டும் இயக்கப்படும்.
இதையும் படிங்க: தேர்தல் தேதி அறிவித்தால் பொன்முடி பதவியேற்பில் சிக்கலா? - சபாநாயகர் அளித்த விளக்கம்