சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியமானது. ஆனால், பாதுகாப்பு குறித்து எவரும் சுட்டிக் காட்டும் அளவிற்கு தமிழ்நாடு இல்லை. பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு கண்ணும் கருத்துமாக உள்ளது என தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, “நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மக்களுடைய பிரச்சினைகள் எழுப்பப்பட்டு, விவாதங்கள் அனுமதிக்காத காரணத்தால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வேண்டிய அவசியம் உருவாக்கியுள்ளது. இதனால், இந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பல முக்கியமான விவாதங்கள், கேள்வி நேரம் போன்ற மக்களுக்கான பிரச்சனைகளை எழுப்பக்கூடிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த அவர், “நாங்கள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும், நிதானமாக ஆலோசனை செய்து சிந்தித்து எடுக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பும் குலக்கல்வி திட்டமாக இதை கொண்டு வந்த பொழுது, திமுக அவற்றை தீர்க்கமாக எதிர்த்தது.
இதையும் படிங்க: பல்லடம் கொலை வழக்கு: சாயல்குடி தம்பதியிடம் நடந்த விசாரணை.. கொலையில் நீளும் மர்மம்!
தொடர்ந்து பேசிய அவர், அதானி பற்றிய குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுக்கிறோம். விவாதிக்க வேண்டும் என்பது மட்டும்தான் எதிர் கட்சிகளின் கோரிக்கை. அதேபோல் மணிப்பூர் பிரச்சனைகள் குறித்து விவாதங்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் எந்த கோரிக்கைகளுக்கும் விவாதம் நடத்தக்கூடாது என்பதில் அவர்கள் குறிக்கோளாக உள்ளனர்” என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், “முதலமைச்சர் ஒரு அரசியல் ஞானி” என்று கூறியது குறித்த கேள்விக்கு, “ முதலமைச்சரை அவர் தெளிவாக புரிந்துகொண்டு அவர் ஒரு அரசியல் ஞானி என கூறியுள்ளார்” என்றார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியமானது. ஆனால், பாதுகாப்பு குறித்து எவரும் சுட்டிக் காட்டும் அளவிற்கு தமிழ்நாடு இல்லை. பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு கண்ணும் கருத்துமாக உள்ளது. பெண்களுக்கு நியாயம் மற்றும் பாதுகாப்பு அளிப்பதில், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.