ETV Bharat / state

"விசாரணைக்கு வந்தே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுத்தால் வர முடியாது" - காவல்துறைக்கு சீமான் பதில் - SEEMAN RESPONSE TO THE POLICE

நடிகை அளித்த புகாரின்பேரில் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சீமானை விசாரணைக்கு வருமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நாதக தலைவர் சீமான்(கோப்புப்படம்)
நாதக தலைவர் சீமான்(கோப்புப்படம்) (Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2025, 5:49 PM IST

சென்னை: நடிகை அளித்த புகாரின் பேரில் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சீமானை விசாரணைக்கு வருமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் விசாரணைக்கு வந்தே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுத்தால் வர முடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகையின் புகார்: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக, நடிகை ஒருவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை அளித்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது,"எனக் கூறியிருந்தார்.

3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு: இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சீமான் மீது நடிகை அளித்த புகாரை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்," என வளசரவாக்கம் காவல் துறைக்கு உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து சீமானை இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) விசாரணைக்கு வருமாறு வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் வெளியூரில் இருப்பதால் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார் என சீமானின் வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு சென்ற வளசரவாக்கம் காவல் துறையினர் சீமானை விசாரணைக்கு வரும் படி உத்தரவிடும் சம்மனை வீட்டின் கதவில் ஒட்டினர். இதனை அங்கிருந்த காவலாளி கிழித்ததால் போலீசாருக்கும் அவருக்கும் இடையே மோதல் மூண்டது.

நாளை வர முடியாது: இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நாதக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "காவல்துறையினர் என்ன விரட்ட வேண்டிய அவசியம் என்ன? இதே போன்று எந்த விவகாரத்தில் இந்த அரசு இது போல தீவிரம் காட்டியிருக்கிறது? என்னை விசாரணைக்கு வரும் படி ஒட்டிய சம்மனை வீட்டில் இருந்த காவலாளி கிழித்துள்ளார்.

இதையும் படிங்க: 'சீமானுக்கு வேறு தேதியிட்ட சம்மன் அனுப்புவோம்' - வளசரவாக்கம் காவல்துறையினர்!

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஏற்கனவே காவல்துறையினர் முன்பு ஆஜராகி உள்ளேன். எனவே, நாளை மறுநாள் விசாரணைக்கு வருவேன் என்று காவல் துறையினரிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், நாளையே வர வேண்டுமென்றால் என்னால் விசாரணைக்கு வர இயலாது.

இந்த வழக்கில் அந்த பெண்ணையும், என்னையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும் போது இந்த பதிலைத் தான் நான் காவல் துறையினரிடம் வலியுறுத்துவேன். முழுமையாக விசாரிக்காமலேயே காவல் துறையினர் இதுதான் நடந்தது என்கிறார்கள். காவல்துறை விசாரணைக்கு பயந்து அச்சப்பட்டு ஓடுபவன் நான் அல்ல. ஆனால், நாளை விசாரணைக்கு வர முடியாது. காவல் துறையினர் முடிந்ததை செய்து கொள்ளலாம்.

எனக்கு எதிராக சதி: திமுக ஆட்சியின்போதெல்லாம் இந்த நடிகை என்மீது புகார் சொல்ல வந்து விடுவார். ஜெயலலிதா, எடப்பாடியார் ஆட்சி காலங்களில் இந்த நடிகை என் மீது புகார் கொடுக்க வரவில்லை. ஏனெனில் என்னை நேருக்கு நேர் அரசியல்ரீதியாக சந்திக்க முடியாமல் திமுக ஆட்சி இவ்வாறு இந்த நடிகையை எனக்கு எதிராக கொண்டு வந்து நிறுத்துகிறது.

பெரியார் குறித்து நான் கூறிய கருத்தால், என்ன அடக்க என்ன செய்வது என தெரியாமல், இது போன்று பழைய வழக்கை விசாரணை செய்கின்றனர். விசாரணைக்கு முன்பே காவல் துறை இவ்வாறு செயல்படுவது நல்லதல்ல. என்னிடம் தாராளமாக விசாரிக்கலாம். என் மீதான குற்றச்சாட்டிற்கு சான்றை கேட்க வேண்டும், சான்று படி என் மீதான குற்றத்தை நிரூபித்து நடவடிக்கை எடுங்கள். காவல்துறை நடத்தும் நாடகத்தை பார்க்கத்தான் போகின்றேன். நாளை தருமபுரி கட்சியினருடன் கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளையே விசாரணைக்கு வரும்படி கூறினால் என்னால் வர முடியாது," என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.