ETV Bharat / state

இளங்கலை நீட் நுழைவுத் தேர்விற்கு மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம்..! மே 5ஆம் தேதி நுழைவுத் தேர்வு..!

UG NEET Entrance Exam: இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு, மார்ச் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கான தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

how to apply ug neet entrance exam
இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 6:49 AM IST

Updated : Feb 10, 2024, 7:22 AM IST

சென்னை: இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு குறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் தேசிய தேர்வு முகமை 2019 முதல் NEET (UG) தேர்வை நடத்தி வருகிறது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 இன் பிரிவு 14-ன் படி, அனைத்து இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளில் MBBS, BDS சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக (NEET UG‌) நடத்தப்பட வேண்டும்.

இதேபோல், இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணைய சட்டம், 2020 இன் பிரிவு 14-ன் படி, ஒவ்வொரு துறையிலும் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கு, ஒரே மாதிரியான நீட் (UG) இருக்கும், BAMS, BUMS மற்றும் BSMS படிப்புகள் இந்தச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ள இந்திய மருத்துவ முறை, ஹோமியோபதிக்கான தேசிய ஆணையத்தின் கீழ் BHMS படிப்பிற்கான சேர்க்கைக்கும் இந்த NEET (UG) பொருந்தும்.

how to apply ug neet entrance exam
இளங்கலை நீட் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

தற்போது 2024ஆம் ஆண்டிற்கான ராணுவ மருத்துவமனைகளில் நடத்தப்படும், 4 ஆண்டு B.Sc நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு மதிப்பெண் பயன்படுத்தப்படும். நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) ஆகியவற்றிலிருந்து 200 கேள்விகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் 50 கேள்விகள் கேட்கப்படும். கொள்குறி வகை தேர்வு 200 நிமிடங்கள் (3 மணி 20 நிமிடங்கள்) மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை வருகிற மே 5ஆம் தேதி நடைபெறும்.

தேர்வு மொழி: இந்த நீட் தேர்வு அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் விவரம்: நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு - ரூ.1,700; EWS/OBC - NCL பிரிவினருக்கு - ரூ.1,600; SC/ST/PwBD/மூன்றாம் பாலினத்தவருக்கு - ரூ.1000 கட்டணங்கள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டும்.

தேர்விற்கு www.nta.ac.in, https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் +91-11-40759000 என்ற எண்ணிலும், neet@nta.ac.in மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 200 நிமிடங்கள் நடைபெறும்.

மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி www.nta.ac.in, https://exams.nta.nic.in/NEET ஆகிய இணையதள முகவரியில் வெளியிடப்படும்.

முக்கியமான வழிமுறைகள்:

  • NEET (UG) 2024-க்கு "ஆன்லைன்" முறையில் https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • தேசிய தேர்வு முகமை இணையதளமான https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். வேறு எந்த முறையிலும் விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தகவல் கையேடு மற்றும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகள் பின்பற்றாத விண்ணப்பதாரர்கள், சுருக்கமாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
  • பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் அனைத்து தகவல்கள் மற்றும் தொடர்புகளும் தேசிய தேர்வு முகமை மூலம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்பதால், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவை தங்களுடையது அல்லது பெற்றோர், பாதுகாவலர்களுடையது மட்டுமே என்பதை மாணவர்கள் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டும் SMS அனுப்பவும்.
  • மேலும் நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு என்ன?

Last Updated : Feb 10, 2024, 7:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.