விழுப்புரம்: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை (பிப்.23) மற்றும் நாளை மறுநாள் (பிப்.24), கூடுதலாக 1,184 பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 682 பேருந்துகள் மற்றும் பிப்ரவரி 24ஆம் தேதி (சனிக்கிழமை) 502 பேருந்துகள் என மொத்தம் இரண்டு நாட்களில் 1,184 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றது,
வழித்தடம் | பிப்ரவரி 23 | பிப்ரவரி 24 | ||
1 | கிளாம்பாக்கம் (KCBT) - திருவண்ணாமலை | 275 | 125 | |
2 | காஞ்சிபுரம் - திருவண்ணாமலை | 40 | 20 | |
3 | புதுச்சேரி - திருவண்ணாமலை | 30 | 20 | |
4 | பெங்களூர் - திருவண்ணாமலை | 20 | 20 | |
5 | வேலூர் - திருவண்ணாமலை | 55 | 55 | |
6 | திருச்சி - திருவண்ணாமலை | 50 | 50 | |
7 | சேலம் - திருவண்ணாமலை | 50 | 50 | |
8 | ஓசூர் - திருவண்ணாமலை | 50 | 50 | |
9 | கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை | 20 | 20 | |
10 | தர்மபுரி - திருவண்ணாமலை | 30 | 30 | |
11 | மற்ற வழித்தடம் - திருவண்ணாமலை | 62 | 62 | |
மொத்தம் | 682 | 502 |
இணையதள சேவை: முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய https://www.tnstc.in/home.html என்ற இணையதளத்தின் மூலமாகப் பதிவு செய்து பயணத்தை இனிமையாக்கிக் கொள்ளலாம். பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: UKG முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா.. மாமன்ற உறுப்பினர்களுக்கு தனி TAB - மாநகராட்சி பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள்!