ஹைதராபாத்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பு அதிகரித்தது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியது. ஏற்கனவே இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தெர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சரின் மிரட்டலான பந்துவீச்சில் குர்பாஸ் 6 ரன்களில் போல்டானார். 3வது வீரராக களமிறங்கிய அட்டல் 4 ரன்களுக்கும், ரஹமத் 4 ரன்களுக்கும் ஆர்ச்சர் பந்துவீச்சில் அவுட்டாக ஆப்கானிஸ்தான் அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.
𝐀𝐅𝐆𝐇𝐀𝐍𝐈𝐒𝐓𝐀𝐍 𝐁𝐄𝐀𝐓 𝐄𝐍𝐆𝐋𝐀𝐍𝐃! 🙌
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 26, 2025
Afghanistan has successfully defended their total and defeated England by 8 runs to register their first-ever victory in the ICC Champions Trophy. 🤩
This marks Afghanistan's second consecutive victory over England in ICC… pic.twitter.com/wHfxnuZiPc
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷகிதி, சத்ரானுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆடினர். ஒரு பக்கம் சத்ரான் அதிரடியாக ஆடிய நிலையில், ஷகிதி பொறுமையாக விளையாடினார். இந்த நேரத்தில் பந்து வீச வந்த அதில் ரஷித், ஷகிதியை 40 ரன்களில் அவுட்டாக்கினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் நபி 40 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுனையில் சத்ரான் நிலைத்து நின்று விளையாடி 146 பந்துகளில் 177 ரன்கள் அடித்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு அசமதுல்லா அதிர்ச்சி அளித்தார். ஃபிலிப் சால்ட் 12 ரன்களுக்கு போல்டானார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் 9 ரன்களுக்கு நபி பந்தில் அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய ஜோ ரூட், பென் டக்கெட்டுகள் சேர்ந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் 38 ரன்கள் சேர்த்த நிலையில், ரஷித் கான் பந்தில் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 25, ஜாஸ் பட்லர் 38, லிவிங்ஸ்டன் 10 ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்த்து வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடிய ஜோ ரூட், ரன் ரேட்டை கடைபிடித்து இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவருக்கு மறுமுனையில் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்து நல்ல ஒத்துழைப்பை வழங்கினார்.
இந்த நேரத்தில் அசமத்துல்லா பந்தில் ஜோ ரூட் 120 ரன்களுக்கு அவுட்டானார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் வெற்றி கிட்டதட்ட உறுதியானது. கடைசி ஓவரில் 9 விக்கெட் இழந்திருந்த இங்கிலாந்து அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. ஓமர்சாய் அபாரமாக பந்துவீசி 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அபாரமாக பந்துவீசிய ஒமர்சாய் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதையும் படிங்க: FACT CHECK: பாகிஸ்தானின் வெற்றிக்கு கெஜ்ரிவால் பட்டாசு வெடித்ததாக டெல்லி முதலமைச்சர் சொன்னாரா?
இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஐசிசி தொடர்களில் இரண்டாவது முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்கும் பட்சத்தில் ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும். இதனை பொறுத்து அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் முடிவாகும். மற்றொரு குருப்பில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.