மேஷம்: இன்று புரிந்து கொள்ள முடியாத மற்றும் அற்புதமான நிகழ்வால் குழப்பமடைவீர்கள். அது நீங்கள் எதிர்பாராததாக இருக்கலாம். ஆனால் நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாகலாம், நிலைமையை தலைகீழாக மாற்றாவிட்டாலும், நிச்சயமாகப் பல விஷயங்களை மதிப்பீடு செய்ய உதவும். இதைத்தவிர, காலக்கெடுவை சமாளிக்கச் சிரமப்படுவீர்கள். இருந்தாலும், உங்கள் வேலையின் முக்கியத்துவத்தைப் பற்றி பிறருக்கு எடுத்துச் சொல்லலாம்.
ரிஷபம்: நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் ஏமாற்றமும், எரிச்சலும் ஏற்படலாம். நபர்களையும், பொருட்களையும் பற்றி இயல்பாகவே உணர்வுப்பூர்வமாகக் கருதுபவர். உங்கள் அதீத அணுகுமுறை யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தாது. தவறுகளை நியாயப்படுத்தும் மனப்போக்கு, விஷயங்களை மோசமாக்கலாம். அவர்களின் நியாயமான கோபத்தை நீங்கள் புறக்கணிப்பீர்கள். விஷயங்களை சரியான முறையில் மாற்றியமைத்துக் கொள்வதற்குப் பதிலாக பொருள் ஆதாயங்களின் பின் ஓடுவீர்கள்.
மிதுனம்: குடும்பத்தினருடன் பயணம் செய்ய விரும்பும் ஆசை அதிகரிக்கும். உங்கள் பயணத்தைத் திட்டமிடுவீர்கள். பயணத்திற்கு உகந்த நேரம் இது. உங்கள் வரவு செலவு திட்டத்திற்குள் பயணத் திட்டங்களை திருப்திகரமாக நிறைவேற்ற முடியும்.
கடகம்: அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தாலும், உங்களுடைய திறமையை உயரதிகாரிகள் முழுமையாக மதிக்காததால் மனம் வருத்தப்படுவீர்கள். அதை மனதின் ஆழத்திற்கு எடுத்துச் செல்லவோ அல்லது சோகமாக இருக்கவோ வேண்டாம். இறுதியில், உங்கள் உறுதியான மனோதைரியம் வெற்றி பெறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலை வேளையில் பதற்றமான சூழல் ஏற்படலாம்.
சிம்மம்: அனைத்து சவால்களையும், தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். எந்தவித சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இலக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதே உங்கள் இறுதி லட்சியமாக இருக்கும். வியாபாரத்திலோ, தொழிலிலோ கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சொந்த வாழ்க்கை இடையூறு ஏதுமின்றி சுமுகமாகத் தொடரும்.
கன்னி: பேச்சாற்றலும் ஆக்கப்பூர்வமான திறமைகளும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வீர்கள் என்ற போதிலும், எந்தவித அழுத்தமோ அல்லது சிக்கல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
துலாம்: பெரிய இலக்கு வைத்திருக்கும்போது, சிறிய விஷயங்களை சமாளிப்பது எரிச்சலை உண்டாக்கும். இருப்பினும், உங்கள் உற்சாகத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டாம். ஏனென்றால், அதன் மூலம் புதிய சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றலாம்.
விருச்சிகம்: வாழ்க்கையில் இதுவரை அனைத்து உயரங்களையும் அனுபவித்து வந்த நீங்கள், இன்று தொழிலில் இழப்பை சந்திக்க நேரிடலாம். முதலாளி, சகாக்கள் மற்றும் உங்களுக்கிடையே உள்ள புரிதலில் சற்று சுணக்கம் ஏற்படலாம். இருந்தாலும், அதை மாலைக்குள் சரிசெய்து விடுவீர்கள். புதிதாக தொழிலில் இறங்கியவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
தனுசு: தேவையற்ற செலவுகள் உங்களை சிந்திக்கவைக்கலாம். திட்டமிடுதல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக சிந்திக்கச் செலவிடுவதில் நேரம் விரயமாகும். கடுமையான பணிச்சுமைக்குப் பிறகு உற்சாகமான மாலை மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும்.
மகரம்: நாளின் முற்பகுதியில் அவநம்பிக்கை ஆக்கிரமிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கும். நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலை செய்வதோடு, வெளியாட்களுக்குச் செய்து கொடுக்க வேண்டிய பணிகளும் சேர்ந்து உங்களை அழுத்தும். இறுக்கமான மனநிலை மாலை வேளையில் மாறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக உணவருந்தும் சூழ்நிலை ஏற்படும்.
கும்பம்: பெரிய திட்டங்களை தீட்டுவதற்கான முக்கியமான நாள் இன்று. வீடு வாங்குவது தொடர்பான முடிவை எடுக்கும் வாய்ப்புண்டு. வேலை மாற்றம் அல்லது திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது என வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கும் நாளாக இந்த நாள் மாறலாம். திடீரென எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் தென்படுகின்றன. மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் உற்சாகமான நாள் இது. இன்று எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
மீனம்: செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட வேண்டிய நாள் இது. முன்னுரிமை என்ன என்பது குறித்த யதார்த்தமான தொலைநோக்கு கோணத்தைப் பெறுவதோடு, இருக்கும் நேரத்தில் இலக்கை எவ்வளவு அடைய முடியும் என்ற கணிப்பையும் செய்ய வேண்டும். நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பது காலதாமதத்திற்கு வழிவகுக்கும்.