சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல்வேறு மொழியைச் சேர்ந்த முக்கியமான நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய், கமல்ஹாசன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்து மாபெரும் வெற்றி திரைப்படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் இணைய வேண்டும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.
Yes, you guessed it right!❤️🔥 @hegdepooja from the sets of #Coolie @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv@girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/SThlymSeog
— Sun Pictures (@sunpictures) February 27, 2025
இந்நிலையில் ’லியோ’ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணையவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் படத்தைப் பற்றிய அறிவிப்பிற்கு வெளியிடப்பட்ட ப்ரோமோ வீடியோவில் ரஜினியின் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதையாக இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டு வந்தது.
லோகேஷ் கனகராஜின் சினிமா உலகமான LCU யுனிவர்சில் இந்த படம் இடம்பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருந்தது. ஆனால் இப்படம் LCUவில் இடம்பெறாது எனவும் இது தனிக்கதை எனவும் லோகேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூலி படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது. அந்த பாடலும் முழுமையாக வெளியாகவில்லை. அதன் பிறகு எந்தவித அப்டேட்டும் இப்போதுவரை இல்லை.
இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று முகம் மறைக்கப்பட்ட நடிகை ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு அவர் யார் என இன்று (பிப்.27) அறிவிக்கப்படும் என தெரிவித்தது. அதற்கு அவர் யாராக இருக்கும் என கண்டுபிடியுங்கள் எனவும் பதிவிட்டிருந்தனர். இதற்கு ரசிகர்கள் பூஜா ஹெக்டே என கருத்துகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ”அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்”... 15 ஆண்டுகளை கடந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’!
தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன் எக்ஸ் பக்கத்தில் நீங்கள் கணித்தது போலவே பூஜா ஹெக்டே தான் என பதிவிட்டுள்ளது. கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தெரிய வருகிறது. கூலி திரைப்படமானது வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு ரஜினியின் ’ஜெயிலர்’ படத்தில் தமன்னா காவாலா எனும் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட். ஏற்கனவே பூஜா ஹெக்டே விஜய்யின் கடைசி படமான ’ஜனநாயகன்’ திரைப்படத்திலும் சூர்யாவின் ’ரெட்ரோ’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.