சென்னை: இசை உலகில் ஆயிரத்திற்கு மேற்பட்ட படத்திற்கு இசையமைத்து, ரசிகர்களால் இசைஞானி, ராகதேவன் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க உள்ளார். இப்படத்தினை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (மார்ச்.20) வெளியாக உள்ளது. சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் படத்திற்கான அறிவிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு படம் தொடர்பான அறிவிப்பையும், படத்தில் பணியாற்றக்கூடிய தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: சூர்யாவின் மிரட்டலான தோற்றத்தில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் வெளியானது கங்குவா டீசர்!