டெல்லி : பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடச் சென்றனர்.
டெல்லியில் உள்ள ஜந்தார் மந்தர் பகுதியை நோக்கி தமிழக விவசாயிகள் சென்று உள்ளனர். அப்போது தமிழக விவசாயிகளை மறித்த துணை ராணுவ அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியாக தானே போராட்டம் நடத்த செல்கிறோம், எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என தமிழக விவசாயிகள் கேள்வியெழுப்பியதாகவும் பேசிக் கொண்டிருந்த போதே, துணை ராணுவ அதிகாரி விவசாயி ஒருவரை தள்ளிவிட்டதாகவும் தெரிகிறது.
இதை பார்த்த மற்ற விவசாயிகள், துணை ராணுவ அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய பெண் விவசாயிகளை துணை ராணுவ படையினர் அவதூறாக பேசிய தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து துணை ராணுவ அதிகாரிகளை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக விவசாயிகளை பலவந்தமாக கீழே தள்ளுவதையும், தாக்குவதுமாக ராணுவ அதிகாரிகள் இருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அமைதியான வழியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமுக வலைதளங்களில் பரவிய நிலையில், குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் கண்டனம் எழுந்து உள்ளது.
இதையும் படிங்க : "தனது 90 விநாடி உரை காங்கிரஸ், இந்தியா கூட்டணியை நடுநடுங்கச் செய்துள்ளது" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024