தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை! - மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை

By

Published : Mar 25, 2022, 4:46 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

15ஆவது நிதிக் குழு மாநிலங்களுக்கான நிதி பகிர்வு கூடுதலாக நிர்ணயித்துள்ளது என்பதை வரவேற்றோம். ஆனால் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து 30 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு நிதிச் சுமையில் சிக்கித் தவிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. இதனை ரூ.3000 ஆக மாற்ற வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான 12 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக எம்.பி., ரவிக்குமார் கோரிக்கை விடுத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details