கழிவுநீர் கால்வாய் கேட்டு பொது மக்கள் சாலை மறியல் - veppanpattu residents road block
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இருந்த கழிவு நீர் கால்வாய் தேசிய நெடுஞ்சாலைப்பணியின்போது மூடப்பட்டுவிட்டதால், ஓராண்டுக்கும் மேலாக கால்வாய் இல்லாமல் அவதிப்படுவதாகவும் கழிவுநீர் வீட்டின் அருகே தேங்குவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இந்தநிலையில் அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST