வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் உத்திரத் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு விழா - வடமாடு மஞ்சுவிரட்டு விழா
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கொல்லங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 126 வீரர்களும் பங்கேற்றனர். வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 14 காளைகள் 126 வீரர்கள் பங்கேற்ற நிலையில் சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் சிறந்து விளங்கிய காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரூ.6,001 ரொக்கப்பணமும் ஏராளமான பரிசுப் பொருட்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST